Main Menu

Lyon :கத்திக்குத்து தாக்குதல்

லியோனில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.  லியோன் நகரின் ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள place de la Baleine பகுதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 2 மணி அளவில் வீதியில் சென்ற வீடற்ற நபர் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு RAiD அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.   நாற்பது வயதுகளையுடைய ஆயுததாரி 4 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.