Lille காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் சாவடைந்துள்ளார்

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் ஒருமாத காலத்தின் பின்னர் சாவடைந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி Lille மாவட்டத்தின் நகர்புறத்தில் வைத்து குறித்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தார். அன்றைய தினம் மாலை 6:30 மணி அளவில் குறித்த நபர் மகிழுந்து ஒன்றை திருடுவதை கண்டுள்ளனர். குறித்த நபரை சரணடையும் படி BAC அதிகாரிகள் பணித்துள்ளனர். ஆனால் அவர் அதை மறுத்ததால் அதிகாரி, ஒரு தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் குறித்த நபர் காயமடைந்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிகிச்சைகளுக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை IGPN அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த நபர் 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !