G7 மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
G7 மாநாடு இடம்பெற்று வரும் மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூலை பாதுகாக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று(சனிக்கிழமை) G7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், G7 மாநாடு நடைபெறும் பையாரிட்ஸ் நகரில் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.