FeTNA 2017 புதுப்பிப்புகள் மற்றும் மாதாந்த இலக்கிய கூட்டம்

 

மாதந்தோறும் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை (05/28/17) இரவு கிழக்கு நேரம் 9:00 மணிக்கு நடக்கவுள்ளது. இந்த இலக்கியக் கூட்டத்தில் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற வேண்டுகிறோம்.

அனைத்து தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கும் மற்றும் செயலாளர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள், இந்த மின்னஞ்சலை உங்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு பேரவையின் சார்பாக அன்புடன் வேண்டுகின்றோம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
இலக்கியச் சொற்பொழிவு
சமகால‌ தமிழ்நாடகக் கலை: சில சிந்தனைகள் …

திரைப்பட நடிகர், அரங்கக் கலைஞர் திரு. சண்முகராஜன் M.Phil in Tamil Lit
(நிறுவனர், நிகழ் நாடக மையம், மதுரை)

விருமாண்டி, அந்நியன், தம்பி, பூலோகம், உத்தமவில்லன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக நாடகக் கலைக்கான பயிற்சிப் பட்டறை, ஆய்வரங்கம், கலை விழாக்கள் நடத்துதல் என தமிழ் நாடகத் துறையில் தொடர்ந்து இயங்கி வருகின்றார். அரங்கக் கலை குறித்து தமிழில் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், தில்லியில் உள்ள “தேசிய நாடகப் பள்ளியில்” நாடகக் கலையும் பயின்றுள்ளார்.

தேதி: 2017, மே 28, ஞாயிற்றுக்கிழமை Sunday (05/28/2017)
நேரம்: இரவு 9:00 மணி முதல் 10.00 ET
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670) Code: 873905#

சொற்பொழிவாளர் சண்முகராஜன் அவர்கள் மதுரையிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

பேரவை இலக்கியக்குழு






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !