COVID-19 : IKEA நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடுகிறது
அமெரிக்காவில் COVID-19 கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில் IKEA நிறுவனம் அங்குள்ள அதன் அனைத்துக் கடைகளையும் தற்காலிமாக மூடுகிறது.
அறைகலன்களைத் தயாரிக்கும் IKEA நிறுவனம் அமெரிக்காவில் 50 கடைகளை வைத்துள்ளது. அமெரிக்கா அந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தை.
அத்துடன் நெதர்லந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், கனடா, டென்மார்க் அகிய நாடுகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் தற்காலிமாக மூடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, சீனாவில் வூஹான் நகரில் உள்ள கடையைத் தவிர மற்ற இடங்களில் உள்ள அனைத்துக் கடைகளையும் IKEA நிறுவனம் மீண்டும் திறந்துள்ளது.
பகிரவும்...