COPA குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் எனவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பகிரவும்...