உலகம்
காசாவில் இனச் சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின்மேலும் படிக்க...
விண்வெளி ஆராய்ச்சியில் ஒட்சிசன், ரொக்கெட் எரிபொருளை உருவாக்கும் சீனா

சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கைமேலும் படிக்க...
வட நைஜீரியாவில் பாடசாலை விடுதியொன்றில் தீ விபத்து – 17 மாணவர்கள் உயிரிழப்பு

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை

சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக நேற்று முன்தினம் (04)மேலும் படிக்க...
பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் பூர்வீக இல்லமும் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் இல்லங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து சமூக ஊடகங்கள்மேலும் படிக்க...
உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே அடினோகார்சினோமா எனப்படும் ஒரு வகை நுரையீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...
குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

வடக்கு சிரியா, மன்பிஜ் நகரப் பகுதியில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகில் இருந்த காரொன்றில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களைமேலும் படிக்க...
நபி முஹம்மதுவின் ஹிஜ்ரத் பாதையை மீண்டும் உயிர்ப்பிக்கும் சவூதி அரேபியா

சவூதியில் மதீனா நகரில், “நபியின் பாதையில் (In the Prophet’s Steps)” என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், மதீனா பிராந்திய தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தானால் அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு நபி முஹம்மதின் இடம்பெயர்வின்மேலும் படிக்க...
காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள் – எவ்வேளையிலும் மரணிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை

உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கியமேலும் படிக்க...
சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை – பின்னணியில் வேறு நாடு என சந்தேகம்

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின்மேலும் படிக்க...
தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் தென் 169 பயணிகள்மேலும் படிக்க...
ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச் சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
உக்ரைன் ரஸ்ய போர்முனை – வடகொரிய படையினர் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்க வைத்து மரணிக்கின்றனர்

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் ரஸ்யாவின் சார்பில் போரிடும் வடகொரிய படைவீரர்கள் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என உக்ரைனிய படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஸ்கைநியுஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது வடகொரிய படையினர் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர்மேலும் படிக்க...
புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்
உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடுமென சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில்மேலும் படிக்க...
விடுவிக்கப்பட இருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்தமேலும் படிக்க...
எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு

எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர். எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாக சர்வதேச ஊடககங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. போர்நிறுத்த உடன்பாட்டைமேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா நோக்கிப் படையெடுப்பு

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்மதியினூடாக எடுக்கப்பட்ட படங்களில் கடலோரப் பாதையினூடாக காசா நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் மக்கள்மேலும் படிக்க...
1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு உத்தரவு

உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 155
- மேலும் படிக்க


