உலகம்
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகமேலும் படிக்க...
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

திட்டமிட்டவாறு காசாவிலிருந்து கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிக்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் . 6 பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பின் போது 17 சுரங்க தொழிலாளர்கள் வாகனத்திலிருந்ததாக வெளிநாட்டுமேலும் படிக்க...
செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவுமேலும் படிக்க...
கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு

கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய ரயில் விபத்துக்கு நீதி கோரி கடந்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்களைமேலும் படிக்க...
சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – பலர் பலி
ஆப்கானிஸ்தான் – காபூல் அருகே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகினர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தற்கொலைக் குண்டு தாக்குதல்தாரியும்மேலும் படிக்க...
தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐவர் பலி

தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐந்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்வானின் மத்திய நகரமான தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர்மேலும் படிக்க...
அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி – அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை

சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம் தெரிவித்தது. இதையடுத்து அந்த நபரை அவரதுமேலும் படிக்க...
ஹமாஸ் பணயக் கைதிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கை
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலையை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்திருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக குற்றஞ்சாட்டியே ஹமாஸ் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா

உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50மேலும் படிக்க...
பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 30 பேர் பலி

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுமேலும் படிக்க...
சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு திருமணத்திற்குப் பதிவு செய்த தம்பதிகளின் எண்ணிக்கை 6.1 மில்லியனாகவும்,2023ஆம் ஆண்டு 7.68 மில்லியனாக இருந்ததாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. குழந்தை பராமரிப்புமேலும் படிக்க...
5% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில்மேலும் படிக்க...
இஸ்ரேலிய படையினரால் கொடுமைக்கு உள்ளான பாலஸ்தீனியர்

இஸ்ரேலிய படைகள் நேற்று விடுவித்த பாலஸ்தீனிய பணயக் கைதி ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பேசும் ஒரு காணொளிப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நபரின்மேலும் படிக்க...
உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். உக்ரெய்ன் –மேலும் படிக்க...
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்றுமேலும் படிக்க...
ரஷ்யாவில் வடகொரிய இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யுக்ரேன் குற்றச்சாட்டு
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவத்தினர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் காரணமாக ரஷ்யாவில் நிலை கொண்டிருந்த வடகொரியப் படைகள் மீளப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,மேலும் படிக்க...
காசாவின் இனப் படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் தடை விதிப்பு
இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். காசாவிலிருந்து மில்லியன் கணக்கான பலஸ்தீனர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 155
- மேலும் படிக்க
