உலகம்
நியூஸிலாந்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.7 ஆக பதிவு

நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று (மார்ச் 25) காலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. அந்த பகுதியில்மேலும் படிக்க...
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 7 பேர் பலி – 40 பேர் காயம்

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. லெபனானில் உள்ள உட்கட்டமைப்பு தளங்கள் மற்றும் ஆயுத களஞ்சியசாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், குழந்தை உள்ளிட்டமேலும் படிக்க...
AI தொழில் நுட்பத்தில் உருவான முதல் செய்தித்தாளை வெளியிட்டு இத்தாலி சாதனை

கணினித் துறை மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் AI பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத்மேலும் படிக்க...
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இந்தோனேசியாவில் 3 தமிழருக்கு மரண தண்டனை?

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூரில் வெளிக்கிழமைதோறும் வெளியாகும் ‘தப்லா’ ஆங்கில வார இதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன்மேலும் படிக்க...
கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்க பாகிஸ்தான் திட்டம்

பாகிஸ்தான், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சரின் தலைமை ஆலோசகரும், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சிலின் (PCC) தலைமை நிர்வாக அதிகாரியுமான பிலால் பின் சாகிப், ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த செவ்வியில்மேலும் படிக்க...
சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானிமேலும் படிக்க...
காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல் ; சவுதி அரேபியா கண்டனம்
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மின்சார விநியோகத்தை துண்டித்ததமைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீண்டும் மீறியுள்ளதை இஸ்ரேல் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளது. காசாவுக்கு எந்த நிபந்தணைகளும் இன்றி மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வரமேலும் படிக்க...
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்

அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், நரகத்தின்மேலும் படிக்க...
9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில்மேலும் படிக்க...
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்: பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார்கள். இதற்கான பயணம் தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முன்னதாக நாசா அறிவித்துள்ளபடி,மேலும் படிக்க...
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்- 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,மேலும் படிக்க...
ஹங்கேரி: 2 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை

ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது.மேலும் படிக்க...
சீனா மீதான ஆதரவுக்காக பெண்ணொருவரை நாடு கடத்த தாய்வான் உத்தரவு

தாய்வானுக்கு எதிராக சீனாவின் படைபலத்தைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக ஆதரித்த தாய்வானிய நபரின் மனைவியை (சீனப் பெண்), நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சட்டத்தின்படி அவர் நாடு கடத்தப்படுவார் என்று தாய்வானின் தேசிய குடியேற்ற நிறுவனம் (NIA)மேலும் படிக்க...
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்-கான வழிகள் குறித்து விவாதிக்கவுள்ள ட்ரம்ப் – புட்டின்

உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறும் பொழுது, ‘நிலம்’ மற்றும் ‘மின் உற்பத்தி நிலையங்கள்’ தொடர்பாக தானும் விளாடிமீர் புட்டினும் விவாதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில சொத்துக்களைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்கனவே உரையாடி வருவதாகவும்மேலும் படிக்க...
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்புவார் – அட்டவணையை வெளியிட்டது நாசா

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளனர். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படிமேலும் படிக்க...
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் கொல்லப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்து வரும் லஷ்கர்-இ-தொய்பாவின் மூளையாக அபு கட்டால் செயல்பட்டதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியானமேலும் படிக்க...
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து அருகே குண்டுவெடிப்பு: 7 பேர் மரணம், 35 பேர் காயம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் இன்று (16) மற்றொரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. நுஷ்கி-தல்பண்டின் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 35 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்திமேலும் படிக்க...
வட மசிடோனியாவில் இரவுநேர களியாட்ட விடுதியில் தீ விபத்து – 51 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வட மசிடோனியாவில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த களியாட்ட நிகழ்ச்சியில் 200 ற்கும்மேலும் படிக்க...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ மூலம் ஆஜரானார் பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முதல் ஆசிய தலைவராகியுள்ளார். பிலிப்பைன்சின் 79 வயது முன்னாள் ஜனாதிபதி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீடியோ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரொட்ரிகோ டுட்டர்டேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 155
- மேலும் படிக்க
