உலகம்
பொருளாதார நெருக்கடியால் மீள்வதற்கு இந்தியா உதவுமென மாலைதீவு நம்பிக்கை
மாலைத்தீவு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவுமென தாம் நம்புவதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மொஹமட் முய்ஸு, நூறு மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிணை எடுப்பை இந்தியாவிடமிருந்துமேலும் படிக்க...
இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு
லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சீன மின்சார வாகனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரி
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது. இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப் போருக்கு களம் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ்,மேலும் படிக்க...
ஜெஃப் பிசோஸை முந்திய மார்க் ஸூகர்பெர்க்: உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்
சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன்மேலும் படிக்க...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராகமேலும் படிக்க...
பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி
லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்தமேலும் படிக்க...
ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு வெடித்தது
ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது. குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை. 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின்மேலும் படிக்க...
இஸ்ரேல் மீதான தாக்குதல் நிறுத்தப் பட்டுள்ளது – ஈரான் வெளிவிவகார அமைச்சர்
பதில் தாக்குதல் இல்லாத வரையில் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்ச்சி (Seyed Abbas Araghchi) தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேலின் தாக்குதலுக்கு தங்களின் பதில் தாக்குதல்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில்மேலும் படிக்க...
சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு
அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும்மேலும் படிக்க...
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை அடைந்தது. கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடாமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகிறார் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன்
லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். இஸ்ரேல் நடத்தியமேலும் படிக்க...
Harry Potter – பேராசிரியர் Minerva McGonagall (Maggie Smith) காலமானார்
Harry Potter நாவல் சீரிஸின் பேராசிரியர் மெக்கானிகல் காலமானார். உலகப் புகழ் பெற்ற Harry Potter நாவல் சீரிஸின் பிரபல கதாபாத்திரமான பேராசிரியர் மினெர்வா மெக்கானிகல் வேடத்தில் நடித்த டேம் மேகி ஸ்மித் காலமானார். அவர் தனது 89 ஆவது வயதில்மேலும் படிக்க...
சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது – அமெரிக்க அதிகாரிகள் தகவல்
சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்துநின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர்துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதுஎனமேலும் படிக்க...
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் – இஸ்ரேல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நான்குமேலும் படிக்க...
சர்வதேச விமான நிறுவனத்தை ஏலத்தில் விற்கும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின்மேலும் படிக்க...
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமுல்
தாய்லாந்தின் மன்னர், திருமண சமத்துவ சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.இந்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதனைச் சட்டமாக மாற்றுவதற்கு அரச அனுமதி தேவைப்பட்டது.அதற்கமைய, அதனைமேலும் படிக்க...
மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேல்
இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம்மேலும் படிக்க...
பொதுக் கூட்டங்களை ரத்து செய்த போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் இருப்பதால் அவர் ஓய்வெடுப்பதற்காக இன்று பொதுக்கூட்டங்களை ரத்து செய்திருக்கிறார்.அந்தத் தகவலை வத்திகன் அலுவலகம் வெளியிட்டது.”போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் உள்ளது. அவர் அடுத்த சில நாள்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 125
- மேலும் படிக்க