இந்தியா
இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து இராமேஸ்வரம் பயணமாகும் மோடி
அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்குப் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதிமேலும் படிக்க...
10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்துமேலும் படிக்க...
பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துடன் துணைநின்ற தமிழக விவசாயிகள் 40 பேர் கைது

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள்மேலும் படிக்க...
”மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

மொழியின் பெயரால் சிலர் நாட்டை பிளவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு விடயங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன. இரண்டாம் கூட்டத்மேலும் படிக்க...
யுரியுப் காணொளி பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞன்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யுரியுப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதன் காரணமாக அவருக்கு முன்னதாகமேலும் படிக்க...
மலையை தகர்த்துக் கட்டியிருக்கும் மாளிகை – ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா மலையை தகர்த்துக்மேலும் படிக்க...
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்புமேலும் படிக்க...
சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிழந்துள்ளார். கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூரில் பதினெட்டுமேலும் படிக்க...
தமிழக மீனவர் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள்மேலும் படிக்க...
தமிழக மீனவர் பிரச்சினை: ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவுமேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது
பணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
மோடி இலங்கைக்கு செல்லக்கூடாது – மாநிலங்கள் அவையில் வைகோ விசனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியாவின் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் விடயங்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கைமேலும் படிக்க...
பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய அவர், 2027 குஜராத் சட்டமன்றத்மேலும் படிக்க...
தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி அரசு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத்மேலும் படிக்க...
“கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது” – அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்

அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். தனியார் தொலைக்காட்சி சேனல் மற்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் அடிப்படைவாத தீவிரவாதம் தலைதூக்குவதுமேலும் படிக்க...
நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம் – பாஜக எச் ராஜா

நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா ஆவேசமாக பேசியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில்,மேலும் படிக்க...
இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்டமேலும் படிக்க...
‘ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்’ – சாய்ரா பானு பகிர்வு

ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
சிகிச்சையின் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர. ரஹ்மான்

சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார், இது அவரின் ரசிகர்கள் மத்தியில் கவலையைமேலும் படிக்க...
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்திய சாலையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- …
- 176
- மேலும் படிக்க
