இந்தியா
இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன்மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்தோடு மோடி இராணுவ ஒப்பந்தம்: தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம்- வைகோ கடும் கண்டனம்
இலங்கை இராணுவத்தோடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட பெரும்துரோகம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுஜனாதிபதி அனுராமேலும் படிக்க...
இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் – மோடி

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான்

சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளயதாக தமிழகமேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் மோடி புனித ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டார்

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இது தொடர்பில் தனது எக்ஸ்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர், “அநுராதபுரத்தில் உள்ளமேலும் படிக்க...
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு

இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் ,மேலும் படிக்க...
பங்களாதேஷின் தலைமை ஆலோசகருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தில் பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில்மேலும் படிக்க...
தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை!
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளைமேலும் படிக்க...
கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும்மேலும் படிக்க...
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தூரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்ப்பது போன்றது என்று விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இமயமலையும், மும்பையும் மிகவும் அழகாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய மதபோதகருக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் தீர்ப்பு 7 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்மேலும் படிக்க...
டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலுமேலும் படிக்க...
“விஜய்க்கு அரசியல் புரிதலே இல்லை!” – அண்ணாமலை

“‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தினார். ‘பீஸ்ட்’ உட்பட இன்னொரு விஜய்யின் இன்னொரு படத்தின் தயாரிப்பு மட்டும் அல்ல, விநியோகத்தையும் ரெட் ஜெயின்ட்தான் பார்த்தது.மேலும் படிக்க...
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முற்போக்கான மாநிலமாக தமிழகம் கருதப்பட்டது. ஆனால் திமுக அரசின் தவறானமேலும் படிக்க...
‘பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணை’ – பிரதமர் மோடி

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர் பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ‘ஆபரேஷன் பிரம்மா’வை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...
பிரதமரின் திறப்பு விழா நிகழ்வுக்காக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை

வரும் ஏப்.6-ம் தேதி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு தென்னக ரயில்வே அதிகாரிகள் ரயில் மற்றும் கப்பலை இயக்கி சோதனை நடத்தினர். மண்டபம் நிலப் பரப்பையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலையை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது: எஸ்.ஜெய்சங்கர்

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், சர்வதேச மட்டத்தில் அதை எடுத்துச் செல்வதாகவும் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பாஜக எம்பிமேலும் படிக்க...
“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” – முதல்வரை சாடிய விஜய்

“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய். தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கு பயணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க அவர் அங்கு செல்லவுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லொவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.மேலும் படிக்க...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதுடன், அவர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 176
- மேலும் படிக்க
