இந்தியா
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில்மேலும் படிக்க...
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம்மேலும் படிக்க...
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தமேலும் படிக்க...
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
பிரதமர் மோடி வரும் 30ம் தேதி உ.பி., மாநிலம் கான்பூர் செல்ல உள்ளார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷூபம் திவேதி குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள்மேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை என்றுஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஏனென்றால்மேலும் படிக்க...
இந்தியாவில் 106 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19மேலும் படிக்க...
நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது பாரிய குற்றச்சாட்டு
நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில்மேலும் படிக்க...
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் முறியடிப்பு

தெலுங்கானா பொலிஸார், ஆந்திரப் பிரதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், நகரில் போலி குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் விஜயநகரத்தைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகியமேலும் படிக்க...
காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் எனவும் துவாரபூடி கிராமத்தை சேர்ந்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் – த.வெ.க. தலைவர் விஜய்

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்தமேலும் படிக்க...
பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர்?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள்மேலும் படிக்க...
வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில்

வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி பெறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , அடுத்த ஆண்டு இந்தியாவின்மேலும் படிக்க...
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தமேலும் படிக்க...
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அவருக்கு குண்டு துளைக்காத கார்மேலும் படிக்க...
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக் கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி

ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய நிலையில் அவர் இதனை தெரிவித்தார் அத்துடன் ஆபரேஷன்மேலும் படிக்க...
‘போர் ஒரு தீர்வல்ல’ – இந்தியா, பாக். பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தல்

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை என தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியா –மேலும் படிக்க...
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை இன்று

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்மேலும் படிக்க...
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா, ஜப்பான் ஆதரவு

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றையமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 176
- மேலும் படிக்க

