Bundesliga கால்பந்து தொடர்: பதினைந்தாவது வார போட்டிகளின் முடிவுகள்

ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம்.

அவ்வாறான் 55ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 27 முறைகள் சம்பியன் பட்டம் வென்று, அசைக்க முடியாத அணியாக பேயர்ன் முனிச் அணி திகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் இத்தொடரின் 2018-2019ஆம் ஆண்டு பருவக் காலத்துக்கான தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இதில் பதினைந்தாவது வார போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…

போருசியா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், போருசியா மொயின்சென்கிளாட்பெச்  அணியும், நியூரன்பெர்க்  அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போருசியா மொயின்சென்கிளாட்பெச் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் போருசியா மொயின்சென்கிளாட்பெச் அணி சார்பில், தோர்கன் ஹசார்ட்  47ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், அலசேன் ப்ளீ 86ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
………………….

மெர்குர் ஸ்பில்-அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், போருசியா டோர்ட்மண்ட்  அணியும், போர்ச்சுனா டசஸ்டோர்ப் அணியும் மோதிக்கொண்டன.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியில், முன்னணி அணியான போருசியா டோர்ட்மண்ட்  அணி 1-2 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதில் போர்ச்சுனா டசஸ்டோர்ப் அணி சார்பில், டூடி லுக்பேக்கியோ  22ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜீன் ஸிம்மர்  56ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

போருசியா டோர்ட்மண்ட்  அணி சார்பில், பேக்கோ அல்கேசர் 81ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !