Blanc-Mesnil -அதிவேகமாக சென்ற மகிழுந்து! – விபத்தில் பெண் பலி!

அதிவேகமாக சென்றுகொண்டிருந்த மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Blanc-Mesnil நகரில் (செந்தனி) உள்ள Avenue Charles-Floquet வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  புதன்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக Peugeot 607 ரக மகிழுந்து ஒன்று அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்துகொண்டிருந்த Citroën C5 மகிழுந்துடன் மோதியுள்ளது. இதனால் எதிரே வந்த மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மகிழுந்துகளின் சாரதிகளும் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர்.
அதிவேகமாக மகிழுந்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய நபருக்கு சாரதி அனுமதி பத்திரம் (ஓட்டுனர் உரிமம்) இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !