Main Menu

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைவதற்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தாம் தயாராகவே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், நாம் எதன் அடிப்படையில் ஒன்றாக பயணிக்கப் போகிறோம்? இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது.

மக்கள் ஆணை கிடைக்கவேண்டுமாக இருந்தால் உடனயாக தேர்தல் ஒன்றை நடத்துங்கள்.

அதன் பின்னர் மக்கள் ஆணைக் கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாம் தயாராகவே உள்ளோம்.

அதனைவிடுத்து, அமைச்சர் பதவிகளை காண்பித்து எம்மை அழைப்பது தவறான செயற்பாடாகும்.

நாட்டில் தற்போது தேர்தல் ஒன்றை நடத்த வேண்டியத் தேவை இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்;.

அப்படி நடந்தாலும் எந்தவொருக் கட்சிக்குள் 50 வீதம் வாக்குகள் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் எப்படி அவ்வாறு கூறமுடியும்? இந்தக் கருத்தானது தேர்தல் முறைமையை நாட்டிலிருந்து இல்லாது செய்யும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருக்க வேண்டுமெனில் அரசமைப்பில் மாற்றமொன்றைக் கொண்டுவர வேண்டும்.

அதற்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை அவசியலம். அல்லது அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.

அதனை விடுத்து தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருக்க நாட்டில் எவருக்கும் உரிமைக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...