Main Menu

எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்

அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும் தன்னார்வத் தொண்டர்கள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் சேர்வதற்கு கையெழுத்திட்டனர்.

நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் 800,000 இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் தாயகத்தைப் பாதுகாக்கும் போரிலும், எதிரியை அழிக்கும் போரிலும் இணைவார்கள் என வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் ரோண்டோங் சின்மம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, இளம் தன்னார்வலர்கள் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலளிப்பதாகக் கூறப்படுகிறது.

பகிரவும்...