Main Menu

சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் – கிறிஸ்டினா ஜோர்ஜீவா

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதேபோன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் நிதியமைச்சர், மற்றும் அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை தாங்கும் முதல் நபரான ஜோர்ஜீவா, சமூக சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் பிற பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்கு கடன் நிவாரணம் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

பகிரவும்...