Main Menu

ஓய்வூதிய சீர்திருத்தம் – இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : பிரதமர்

ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக இனி எந்த வித பேச்சுவார்த்தையும் இடம்பெறப்போவதில்லை என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.

ஓய்வூதிய வயதானது இனி 64 ஆகவே இருக்கும். இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ‘64’ வயது குறித்து உத்தேசமாக சமரசம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான ‘எழுத்து மூலமான’ தரவுகள் கையளிக்கப்பட உள்ள நிலையில், இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து பிரதமர் Élisabeth Borne குறிப்பிட்டார்.

மேற்படி எழுத்துமூலமான சமர்ப்பிப்பு வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...