Main Menu

இந்திய குடியரசு தினம் இன்று: டெல்லியில் கோலாகல கொண்டாட்டம்

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இதன்படி, இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கடமைப் பாதையில் கொடி ஏற்றினார்.

வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பிற்கு முன், 21 குண்டுகள் முழங்க ஆங்கிலேயர் காலத்து பழமையான துப்பாக்கிகளுடன் கூடிய பீரங்கிகள் பயன்படுத்தபடும் நிலையில், இந்தாண்டு 105 மில்லி மீட்டர் இந்திய பீல்ட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

அத்துடன், எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகக் குழுவின் அணிவகுப்பில் முதன்முறையாக பெண்கள் பங்கேற்றனர்.

மேலும், முதல் முறையாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் தலைவரும், அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே, நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும்; பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பகிரவும்...