Main Menu

முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விசேட பேட்டியொன்றை அளித்துள்ளார்.
முதலமைச்சருடனான சந்திப்பு மற்றும் அதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
“தமிழக முதலமைச்சர் விஜய்யை சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அவரிடம் நான் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தினேன்.”
“தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே அது மிகவும் துல்லியமானதாக இருக்கும்.”
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அத்துடன், இதனை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.