அயர்லாந்தில் 45 குற்றச் சாட்டுகளைக் கொண்ட நபர் பாஸ்டராக நியமனம்
கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அயர்லாந்து தேவாலயம் ஒன்றில், 45 குற்றவியல் பின்னணிகளைக் கொண்ட நபர் ஒருவர் பாஸ்டராக (Pastor) நியமிக்கப்பட்ட விவகாரத்தில், தேவாலயத்தின் பாதுகாப்பு விதிகளில் கடுமையான குறைபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ டர்னர் (Joe Turner) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சிடன்ஹாம் (Sydenham) பகுதியில் உள்ள செயின்ட் பிரெண்டன் தேவாலயம் மூலம் அயர்லாந்து தேவாலயத்தின் அதிகாரப்பூர்வ சாதாரண ஊழியராக நியமிக்கப்பட்டார்.
எனினும், கிழக்கு பெல்ஃபாஸ்ட் பங்கின் பாஸ்டராகவே தான் பணியாற்றியதாக டர்னர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பாஸ்டராக நியமிக்கப்படுவதற்குச் சற்று முன்னர்தான், நபர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதாக
வழக்கில் சிக்கியிருந்தார்.
அத்துடன் இவருக்கு ஏற்கனவே 45 குற்றவியல் பதிவுகள் இருந்தபோதிலும், அவர் தேவாலய பாஸ்டராக நியமிக்கப்பட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆனால், தனது கடந்தகாலக் குற்றங்களுக்கும், இந்த ஆன்மீகப் பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஜோ டர்னர் வாதிட்டுள்ளார்.
