அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல
அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கம் தன்னிச்சையாக பொய்களைச் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகின்றது.
“இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புகின்றேன். “பொய்கள் குறுகிய காலம் மட்டுமே” என்றும் கூறினார்.
தேசிய அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தான் லஞ்ச ஊழல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...