பாணதுரே குடு சலிந்துவின் வலையமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் கைது
பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் , அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் வசம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், அவற்றைப் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பைகள், இலத்திரனியல் தராசு, கடத்தலுக்குப் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாகக் கூறப்படும் 36,500 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அருக்கொட, ருக்கஹ வீதியில் வீடொன்றை வடைக்கு எடுத்து அங்கிருந்து போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் “முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கைக்கு இணங்க ஹிரண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாணதுரே குடு சலிந்துவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உறுப்பினரான , டுபாயில் இருக்கும் ‘ரணயா’ என்பவரால் பல்வேறு நபர்கள் மூலம் வழங்கப்படும் இந்த போதைப்பொருளை, இவர் பொதி செய்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
பகிரவும்...