நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பில் இருந்து விலகினோம் – சாணக்கியன்
2026 ஆம் ஆண்டு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியமை நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும், அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும் என்ற விடயங்களுக்காக இலங்கை தழிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்கவேண்டும் அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக் கட்சி நினைக்க முடியாது.
அரசாங்கத்தால் செய்யப்படும் நல்ல விடயங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் ஜனாதிபதி மீது உள்ள நம்பிக்கையின்மையால் நாங்கள் பாதீட்டு மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
