Main Menu

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க பிரஜைகளுக்கு எவ்வித தடையுமில்லை – அமெரிக்க தூதரகம்

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கப் பிரஜைகளுக்கு எந்தவகையிலும் தடை விதிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனைக் குறிப்பிட்டார்.
அறுகம்பைப் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கான பயண ஆலோசனை கடந்த வாரம் திருத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கடந்த பல வருடங்களாக இருந்ததை போல முழு இலங்கைக்குமான பயண ஆலோசனையைத் தொடர்ந்தும் 2ஆவது மட்டத்திலேயே அமெரிக்கா பேணி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...