மார்செய் – பேரூந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய மகிழுந்து

இன்று திங்கட்கிழமை காலை மார்செய் நகரில் மகிழூந்தில் வந்த நபர் ஒருவர் , பேரூந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலை 9.15 மணிக்கு மார்செய்யின் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தையும், அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து 13 ஆம் வட்டாரத்தில் உள்ள பேரூந்து தரிப்பிடத்திலும் என  இரண்டு பேரூந்து தரிப்பிடங்களை இம் மகிழுந்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில், நாற்பதுகளில் வயதுள்ள பெண் ஒருவர்  கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் மற்றுமொரு பெண் (வயது 29)  காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் கைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனும் தகவலும் வெளி வந்துள்ளது. இத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !