91-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இங்கிலாந்து ராணி!

உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த ஆட்சியாக இருந்தது பிரிட்டன் ஆட்சி. 21 வயதில் இங்கிலாந்தின் ராணியாகப் பதிவியேற்ற இரண்டாம் எலிசபெத், விண்ட்சர் மாளிகையில்  இன்று தனது 91-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்.

70 ஆண்டு காலமாக பிரிட்டன் அரசாங்கத்தை சிறப்பாக ஆட்சிசெய்துவரும் எலிசபெத், சில காலமாகத் தனது பொறுப்புகளை எல்லாம் மகன்களுக்கும், பேரன்களுக்கும் பிரித்தளித்துவருகிறார். அடுத்த வாரிசாக, இளவரசர் சார்லஸ் இருக்கும்போதும் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்கள், இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹாரி.

இளவரசர் வில்லியம்ஸ் -கேட் தம்பதியினர், பிரிட்டன் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றனர். மேலும், சமீபத்தில் இளவரசர் ஹாரி தனது குழந்தைப் பருவத்தில் தாய் டயானாவை இழந்து துன்பப்பட்டதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். பிரிட்டன் மக்களின் நம்பிக்கை நாயகனாகவே ஹாரி உருவாகிவருவதாகக் கூறுகின்றனர்.

ராணியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவருக்கு ராணுவம் சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. எப்போதும் இரண்டு பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடும் ராணி, தன்னுடைய அதிகாரபூர்வ பிறந்தநாளை, ஜூன் மாதம் இரண்டாம் சனிக்கிழமை கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !