90வது பிறந்ததினம் – திரு. வேலுப்பிள்ளை தங்கவேல் ஐயா (TRT தமிழ் ஒலி மூத்த அரசியல் ஆய்வாளர்) 10/02/2023

தாயகத்தில் கொழும்புத்துறையை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு தங்கவேல் ஐயா (TRT தமிழ் ஒலி மூத்த அரசியல் ஆய்வாளர்) அவர்கள் தனது 90வது பிறந்தநாளை 10ம் திகதி பெப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்.
இன்று 90வது அகவை காணும் திரு தங்கவேல் ஐயா அவர்களை அன்பு மனைவி சரோசினி பிள்ளைகள் இளங்கோ, மதியழகன், மணிவண்ணன், இராசேந்திரன், திருமகள், அருண்மொழி பாசமிகு பேரப்பிள்ளைகள் அபிராமி, அரசன், நிலா, வெற்றி, வன்னி, மாறன், வன்னி, அழகன், பாரி, இனியன், வடிவு, மீரா மற்றும் அன்பு சகோதரர்கள் சகோதரிகள், பெறாமக்கள் மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இன்று 90வது அகவையில் கால் பதிக்கும் திரு தங்கவேல் ஐயா அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ராஜா (USA) சிங்கை மூர்த்தி
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.
