9 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இதன்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
மேலும் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
பகிரவும்...
