9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ

‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் பணிபுரியும் ‘ரோபோ’க்கள் தற்போது பொருட்கள் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளன.

சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடித்தது.

அளவாக வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களை எடுத்து ஸ்குரூ ஆணிகள் மூலம் அவற்றை நேர்த்தியாக பொருத்துகிறது.

அதற்காக ‘ரோபோ’வுக்கு 2 கைகளும் சமமாக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் எந்திர விரல்கள் மிக அழகாக நாற்காலி தயாரிக்கும் வேலையை செய்கின்றன. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாம் குயாங் குவாங் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !