9ம் ஆண்டு நினைவு அஞ்சலி – வீரவேங்கை பொன்னரசி (12/08/2015)

தாயகத்தில் நாரந்தனை வடக்கு தம்பாட்டி ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சர்மிளா சச்சிதானந்த மூர்த்தி எனும் இயற்பெயரையுடைய , எமது மண் மீட்புக்காக வீரச் சாவைத் தழுவிய வீரவேங்கை பொன்னரசி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் 12ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது.

12.08.2006 அன்று மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது வீரச் சாவினைத் தழுவிய வீரவேங்கை பொன்னரசியை நினைவு கூருபவர்கள் :

அன்பு அப்பா சச்சிதானந்த மூர்த்தி ,அம்மா தயானந்தி , அக்கா மகேஸ்வரி, அத்தான் ரூபன் (France), அக்கா தயாளினி ,அத்தான் தமிழழகன் (ராஜா)France ,அண்ணா பத்மஸ்ரீ,தம்பி நிரஞ்சன்

மற்றும் பெறா மக்கள்: தேசிகன்,உஷாந், சுவாதி,தனுசிகன்,கனுசிகன்,சனுசிகன்

 

காலஞ் சென்றவர்களான அப்பம்மா திரௌபதை,அப்பப்பா சிதம்பர மூர்த்தி, அம்மப்பா தம்பிராஜா,அம்மம்மா தில்லையம்மா,

காலஞ் சென்ற அக்கா இராஜேஸ்வரி

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்றைய நாளில் வீரவேங்கை பொன்னரசியை  நினைவு கூருகின்றார்கள்.

எம் தாய் மண் மீட்புக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிக் கொண்ட வீரவேங்கை பொன்னரசியை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும்.நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துகின்றார்கள்.

இன்றைய எமது வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும்  அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்

வீர வேங்கை பொன்னரசியின் அன்பு அக்கா, தயாளினி தமிழழகன் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .

candle_by_emilyvonjane-d4qa1o6« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !