5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும்  விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று  மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !