Main Menu

80 வயதில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் யோவேரி முசேவேனி

உகண்டாவின் நீண்டகால ஜனாதிபதியான 80 வயதாகும், யோவேரி முசேவேனி ( Yoweri Museveni), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஆளும் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது, அவரது 40 ஆண்டுகால ஆட்சியை நீடிக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், உயர் நடுத்தர வருமான நாடாக உகண்டாவை மாற்றுவதற்கான பணியைத் தொடரமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 1986 ஆம் ஆண்டில் கிளர்ச்சித் தலைவராக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அவர் இரும்புக் கரம்கொண்டு ஆட்சி செய்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அப்போதிருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன், அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கும் வகையில் வயது மற்றும் கால எல்லையினை நீக்குவதற்கு அரசியலமைப்பு இரண்டு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளது.
பகிரவும்...