8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)

குப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் (15/05/2017) அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது ஆத்ம சாந்திக்காகவும் அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் நாமும் பிரார்த்தித்துக் கொள்கிறோம் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

தாய் மண்ணில் பூத்த புது மலர் 

 தமிழீழ தாய்மண்ணில் வந்துதித்த புது மலரே 

எங்கள் அன்பு புதல்வியே தர்சிகாவே 

இன்று உன்னை நாம் இழந்த நாள் 

எம்மால் உன் முகத்தை மறக்க முடியவில்லை 

 

புன்சிரிப்பு பொலிந்த முகம் சிறியோர் முதல் பெரியோர் வரை 

உன் அன்பில் திளைத்தார்கள் எம்மால் உன்னை மறக்க முடியுமா 

எம் செல்வமே உன் இழப்பு எம் 

குடும்பத்துக்கு பேரிழப்பு எம் செல்வமே 

 

எங்கள் அன்புப் புதல்வியே பிறப்பு முதல் இறப்பு வரை 

உன் வாழ்வை  பயத்துடனும் கலக்கத்துடனும் கழித்தாயே 

நிம்மதியற்ற கல்வி நிம்மதியற்ற உறக்கம் எல்லாமே 

இப் பூவுலகில் நிம்மதியற்று வாழ்ந்தாயே எம் செல்வமே 

இறப்பு உனக்கு நிம்மதியாய் போனதோ எங்கள் கண்மணியே 

 

உன்னுடன் ஒன்றாயிருந்த உன் தோழியரை காணும் நேரம் 

உன் நினைவுகள் எங்களை வாட்டுகிறது தர்சிகாவே 

முள்ளிவாய்க்கால் பிரித்தது உன் சகோதரர்களை மீண்டும் 

அவர்கள் விழிகள் தேடுகின்றன உன் மழலை முகத்தை 

காணவில்லை காணவில்லை எங்கள் தேவதை இம் 

மண்ணில் இல்லை எல்லோரையும் கண் கலங்க வைத்து விட்டு

ஓடோடி சென்று விட்டாள் இம் மண்ணை விட்டு 

 

வாழ்க மகளே தமிழ் விழியே எம் 

மனங்களில் என்றுமே வாழ்க மகளே

தமிழ் விழியே!

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !