77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம்

பிரித்தானியாவில் 77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முகமது இல்டப் ஷேக் (77) என்ற மில்லியனர் பிரித்தானியாவில் அரசியல்வாதியாக இருக்கிறார். இவர் மிக பெரிய தொழிலதிபரும் ஆவார்.

கென்யாவில் பிறந்து உகண்டாவில் வளர்ந்த முகமது பின்னர் பிரித்தானியாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் குலி முரடோவா (32) என்ற பெண்ணுடன் முகமதுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இது காதலாக மாறியது.

இந்த காதலுக்கு முகமதின் மனைவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை முகமது விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தெற்கு லண்டனில் தன்னை விட 45 வயது குறைவான குலியை, முகமது திருமணம் செய்து கொண்டார்.

இதில் முகமதின் குடும்பத்தார் யாரும் கலந்து கொண்டார்களா என தெரியவில்லை. முகமதின் மகள் ஜலீனா, குலியை விட 15 வயது மூத்தவர் என்பது முக்கிய விடயமாகும்.

இந்நிலையில் தம்பதிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !