76வது பிறந்தநாள் வாழ்த்து – கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் (05/10/2018)

தாயகத்தில் ஊர்காவற்றுறை தம்பாட்டியை சேர்ந்த கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் அவர்கள் 26ம் திகதி செப்டெம்பர் மாதம் புதன்கிழமை அன்று வந்த தனது 76வது பிறந்தநாளை 5ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.
இன்று 76வது பிறந்தநாளை கொண்டாடும் கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் அவர்களை அன்பு மனைவி தவமணிதேவி அன்பு மகள்மார் நிரஞ்சனா பிரதீபா ஜனனி மகன்மார் சதீஸ்வரன் ஜனோஸ் அன்பு சகோதரர்கள் இலங்கையில் வசிக்கும் இலட்சுமணன் பிரான்சில் வசிக்கும் ஜெயக்குமார் சந்திரகுமார் மச்சாள்மார் பெறாமக்கள் மருமக்கள் மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் (நாடக நடிகர் கலைக்கூத்து நடிகர் மற்றும் இலங்கை கலாச்சார அமைச்சினால் கலாபூஷணம் பட்டமும் பெற்றுள்ள இவர்) மேலும் பல பட்டங்கள் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 76வது பிறந்தநாளை கொண்டாடும் கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர்கள் இலட்சுமணன் ஜெயக்குமார் சந்திரகுமார்.
அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
பகிரவும்...