75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)
தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாக லிகிதர் ஆக தொழில் புரிந்து அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பத்திரிகை நிருபராக நாடக நடிகராக தயாரிப்பாளராக திரைப்பட நடிகராக, இலங்கை வானொலி நடிகர், வானொலி மாகாண செய்தியாளராக, தொழிற் சங்க வாதியாக வாழ்ந்து, பின்னர் டச்சு நாட்டில் வாழும்போது டச்சு மக்களுடன் இணைந்து மனித உரிமை அமைப்பை அமைத்து தமிழ் அகதிகளுக்கு உதவிகளை 20 வருடமாக வழங்கி, பின்னர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரியும் தமிழ் ஒலியின் ஐரோப்பிய வலம் நிகழ்ச்சியில் ஐரோப்பிய செய்திகளை தொகுத்து வழங்கும் கே எஸ் வேலாயுதம் அவர்கள் தனது 75வது பிறந்தநாளை 22ம் திகதி ஏப்ரல் மாதம் புதன்கிழமை இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகின்றார்.
அவரை வாழ்த்துவோர் மகள்மார் நந்தினி பாரிஸ், சுகந்தினி லண்டன், வசந்தினி அவுஸ்திரேலியா, மகன் மகிந்தன் லண்டன் ஆகியோரும், அமரர் வேலாயுதம் யோகேஸ்வரி அவர்களது சகோதரர்கள் சிவரத்தினம் லண்டன், யோகரத்தினம் அமெரிக்கா, ஜெயரத்தினம் கனடா, பஞ்ச ரத்தினம் கனடா, சகோதரிகள் ஜெகதீஸ்வரி லண்டன், சுந்தரேஸ்வரி கனடா, ராஜேஸ்வரி ஜேர்மனி, ஆகியோரும்,
மருமக்கள் திரு.சண்முகநாதன், திரு மகா மேனன் A.J.FOODS லண்டன், முகுந்தன் ரசாயன எந்திர வியலாளர் அவுஸ்திரேலியா, மருமகள் ஜெய மனோகரி (ரஜனி) சுழிபுரம் தங்கை சத்தியபாமா நமசிவாயம் குடும்பம் காரைநகர், பேரப்பிள்ளைகள் சுவேதா நிவேதா பாரிஸ், அக்ஷயா ஆரூரன் லண்டன், மதுஷா மிதுசா லண்டன் , யாகினி பரின் அவுஸ்திரேலியா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வேலாயுதம் ஐயா அவர்கள் தேக ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
75வது பிறந்தநாளை கொண்டாடும் கே எஸ் வேலாயுதம் ஐயா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
தொலைபேசி இலக்கம்:
கே எஸ் வேலாயுதம் ஐயா 0044 78 35 48 58 31