நகைச்சுவைத் துணுக்குகள்

கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.


என்னதான் `Google’ பெரிய வெப்சைட்டா இருந்தாலும்.

சொப்ன சுந்தரி”யை யாரு வச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா ?

டெக்னாலாஜி இன்னும் ரொம்ப வளரனுமங்க !


மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.

நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே…!

அதைத்தான் சொல்லிட்டான்…!


மனைவி: ஹூம்…உங்களுக்கு என் மேல பிரியமே இல்ல…..

கணவன்: அதுசரி….அப்ப நம்ம புள்ளைங்க ரெண்டையும் நான் கூகுள்ல இருந்தா டவுண்லோட் பண்ணுனேன்…..?


விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா…. உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா… தீ……


‘மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?””அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!”


“டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!”

“ஏன் என்னாச்சு?”

“அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!”


“எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!”

“அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?”


“நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்”

“அப்புறம் ஏன் சோகமா இருக்கே?”

“இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?”


கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..


நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா… எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.


“கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்.” “அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.”

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? தம்பி: டாக்டர் தான் ‘அறை’மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

“ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!”
“நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.”

“என்னப்பா காபியில ‘ஈ’ செத்துக்கிடக்குது…?” “ஸ்பெஷல் காபியிலதான் சார் ‘ஈ’ உயிரோட இருக்கும்”

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்அப்புறம்?

நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…!


“பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க.” “அவன் அப்படி என்ன சொன்னான்?”
“நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?”னு சொன்னான்.

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க ‘டிபன் ரெடியா?’ன்னு கேட்டா ‘நேத்தே ரெடி’ங்கறான்!

“அந்தக் கல்யாணத்துல ரொம்ப ‘ஈ’ மொய்க்குது, ஏன்?” “ஏன்?”
“அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்..”

“நீங்கள் எப்போதும் என்ன சோப் உபயோகிக்கிறீங்க?” “நான் எப்போதும் சோப் உபயோகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்”

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்… அதான்….


மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.

நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே…!

அதைத்தான் சொல்லிட்டான்…!


அமெரிக்க நகர் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் ‘குட் வ்னிங் சார்..’அவர் ‘குட் வ்னிங்,

ஏதாவது பிச்சனையா?’. போலிஸ், ‘நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்.

ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்,

ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல்,

சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு,

உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்’.

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், ‘இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்’ என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி ‘சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்’ என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், ‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..’


செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!”

“என்னாச்சு?”

“பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க”


“செக்யூரிட்டி வேலை கேக்கறியே… உனக்கு என்ன தகுதி இருக்கு..?”

“சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!”


சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எடுக்கறவங்க அழுதா அது சினிமா. பாக்கறவங்க அழுதா அது சீரியல்


இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?

பத்து ரூபா.

லூசுன்னா எவ்ளோ?

எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.


“மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?”

“சரி, டா டி”


உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் ‘குட்நைட்’ன்னு சொல்லிட்டுப் போறாரே…எதுக்கு?

ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.


“நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?”
“போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.”

“என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க… கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?”
“அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!”

தமிழ் ஆசிரியர்: ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே” சிரிங்கன்னு, அதான்……

“என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!”
“பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?”

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், ‘figure’ டா!

ஒருவர்: சாமி… உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க…?
சாமியார்: பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்.

டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்!
நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?

சென்னை ஹோட்டலில்.. “மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது… இன்னும் வரலையே…?” “மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர..”

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் ” சாதிக்” -ஐ விரும்பறேன்.. ….. 😛


“தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை…!”
“சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை… கொட்டாவிதான் விட்டேன்…!”

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !