71 விடுதலைப் புலிகளை விடுதலை செய்யமுடியாது – விஜயதாச ராஜபக்ஷ

71 விடுதலைப் புலிகளை எந்தவித காரணத்தினாலும் விடுதலைசெய்யமுடியாது என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த 71 விடுதலைப் புலி உறுப்பினர்களும் குண்டுவைத்தல், கொலை செய்தல் போன்ற பாரிய குற்றமிழைத்தவர்கள் எனவும் அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்கப்படுள்ளனர் என்ற கருத்து தவறானது.

நாங்கள் 12,000 ஆயிரம் விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்.

ஆனால் கடும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 71 புலிகள் மட்டுமே இன்னும் தடுப்பில் உள்ளனர்.

பேருந்துகளில் குண்டு வைத்தல். கொலை என பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர்களை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது, அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !