Main Menu

65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் (10/04/2025)

தாயகத்தில் கரணவாய் அண்ணா சிலையடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stolberg நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் அவர்கள் தனது பிறந்தநாளை 10ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இன்று கொண்டாடுகிறார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் அவர்களை அன்பு மனைவி சுபாசினி, அன்புப்பிள்ளைகள் ஜனோதன், நிதர்ஷன், பிருந்தா மற்றும் தாயகத்தில் இருந்து அம்மா, மாமா, சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து கரணவாய் முத்துமாரி அம்மன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கின்றனர்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திரு. பத்மநாதன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப்பிள்ளைகள் ஜனோதன், நிரோஷன், பிருந்தா ஆகியோர்.

அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.

பகிரவும்...
0Shares