61 வது கிராமி விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்

சர்வதேச இசை சாம்ராஜ்ஜியத்தின் ஜாம்பவான்களுக்கு மகுடம் சூடும், 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

இசை உலகில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வழங்கப்பட்டன. லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் 49 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவை 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் தொகுத்து வழங்கினார். இதில், ஆண்டின் சிறந்த பாடலாக childish gambino-வின் This Is America என்ற மியூசிக் அல்பம் தேர்வு செய்யப்பட்டது.

பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா, மூன்று பிரிவுகளில் விருது வென்று அசத்தியுள்ளார். தனி நபர் பிரிவு மற்றும் குழுப்பிரிவில் சிறந்த பொப் பாடலுக்கான விருதுகளை வென்ற லேடி ககா, சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இதில் Shallow என்ற பாடலை எழுதி பாடியதற்கு லேடி ககா இரண்டு விருதுகள் பெற்றுள்ளார். எலெக்ட்ரோனிக் அல்பம் மற்றும் நடனப்பிரிவில் உமன் வோர்ல்ட் வைட் (woman world wide) பாடலுக்கு விருது அளிக்கப்பட்டது.

நடனப்பிரிவில் எல்க்ட்ரிசிட்டி நடன குழு விருது பெற்றது. சிறந்த பொப் பாடகருக்கான விருதை ஸ்வீட்னர் பாடலுக்காக ஆரியானா கிரான்டே பெற்றார். சிறந்த நாட்டுப்புற பாடல்களை இயற்றியவருக்கான விருதை ஸ்பேஸ் கௌபோய் பாடல் அல்பத்திற்கு பாடல்களை எழுதிய லூக் லாய்ர்ட் (luke luird), ஷேன் மிக் அனால்லி,( shane mc analley) மற்றும் கேசி மஸ்கிரேவ்ஸ் ( kacey musgraves) தட்டிச் சென்றனர்.

பட்டர்பிளைஸ் ஆல்பத்திற்காகவும் கேசி மஸ்கிரேவ்ஸ் தனிநபர் பிரிவில் விருது பெற்றார். திரைப்பட இசை பிரிவில் சிறந்த இசைக்கான விருதை குவின்சி படத்திற்காக குவின்சி ஜோன்ஸ் பெற்றார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மிலி சைரஸ் , கார்டி பி , கேமிலா காபேலோ ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.  மேலும்  இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது குடும்பத்துடன் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !