Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. சின்னத்துரை ஐயர் மகேசன் (திருப்பதி வீடியோ) 17/10/2020

தாயகத்தில் நல்லூரை சேர்ந்த பிரான்ஸ் Torcy இல் வசிக்கும் சின்னத்துரை ஐயர் மகேசன் (திருப்பதி வீடியோ) அவர்கள் 16ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 60வது பிறந்தநாளை 17ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி வீடியோ மகேசனை அன்பு மனைவி லதா, அன்பு பிள்ளைகள் பிரதாஸ், ஜீவ்தாஸ், பைரவி மருமகள் சோபிதா, பேரன் நிலான், தாயகத்தில் வசிக்கும் விக்கினராஜா அண்ணா குடும்பம், லண்டனில் வசிக்கும் பாப்பா அண்ணா குடும்பம், பிரான்சில் வசிக்கும் மகேந்திரராஜா
அண்ணா குடும்பம், கனடாவில் வசிக்கும் பரமகுருசாமி தெய்வசேனா அக்கா குடும்பம், பிரான்சில் வசிக்கும் ரவீந்திரன் அண்ணா குடும்பம், பிரான்சில் வசிக்கும் ஸ்ரீகாந்தன் இந்திரா அக்கா குடும்பம், பெறாமக்கள்,மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் கடவுள் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி வீடியோ மகேசன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிரதாஸ், ஜீவதாஸ், பைரவி.

அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.