51 வயதுடைய மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை – தற்கொலை!

87 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் பொலித்தீன் பை ஒன்றினால் தலையை மூடி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, வாக்குவாதம் ஒன்றின் முடிவிலேயே இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு, Liancourt (Oise) பகுதியில் உள்ள குறித்த வீட்டின் அருகில் இருப்பவர்களால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குறித்த வீட்டில் இரவு பகலாக விளக்குகள் எரிந்துகொண்டு உள்ளன எனவும், வீட்டினரின் நடமாட்டத்தை காணவில்லை எனவும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். வீட்டுக்குள் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 87 வயதுடைய நபர் எழுதிய அக்கடிதத்தில் ‘கோபத்தில் தவறு செய்துவிட்டேன்!’ என எழுதப்பட்டிருந்தது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னரே விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !