50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து (பொன்விழா) திரு லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & திருமதி சூசை தஸ்நேவிஸ் குலாஸ்
தாயகத்தில் பேசாலையை சேர்ந்த பிரான்ஸ் Mulhouse நகரில் வசிக்கும் திரு லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & திருமதி சூசை தஸ்நேவிஸ் குலாஸ் தம்பதிகள் 28ம் திகதி ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த தங்களின் 50வது ஆண்டு திருமணநாளை இன்று புதன்கிழமை தமது இல்லத்தில் இனிதாக கொண்டாடுகின்றார்கள்.
இன்று 50வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & சூசை தஸ்நேவிஸ் குலாஸ் தம்பதிகளை அன்புடன் வாழ்த்துவோர் பிள்ளைகள் : அன்ரன், நெல்சன், நெவின் , ஆன்மரி.
மருமக்கள் : கெனாயல் , றொசந்தி, சொபி.
பேரப் பிள்ளைகள் : எஸ்தல், மயலிஸ் (Maëlys), ஜொகான் (Johan), ஜாத் (Jade), எமா (Emma), இசலின் (Isalyn).
சகோதரர்கள் குடும்பம் செல்வம் – ராணி , எட்வர்ட் – ஜொய்சி, தேவதாஸ் – கிறிஸ்மதி, மரியதாஸ் – மெடோனா, ஸ்ரிபன் – கங்கா, கென்னடி – பபிற்றா, ராஜேஸ்வரி லாசர் பிள்ளைகள்.
சகோதர சகோதரிகள் குடும்பம் அந்தோனிக்கம் – டலிமா, எலிசபேத் – சேவியர், பிரான்சிஸ்கா – ஜெயசீலன், அம்புறோஸ் – மலர், தார்சியஸ் – நிர்மலா, தியோப்ளஸ் – ரதி, சாந்தி – தாசன் , பெறாமக்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் திரு. திருமதி தர்மா மாலா, பிள்ளைகள் , மனோகரன் மோகனா குடும்பம், Mulhouse வாழ் நண்பர் நண்பிகள் உற்றமும் சுற்றமும் பல்லாண்டு வாழ்கவென சூழ நின்று வாழ்த்துகின்றார்கள்.
இன்று 50வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & சூசை தஸ்நேவிஸ் குலாஸ் தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
பிள்ளைகளின் வாழ்த்து
தங்கத் திருமணத்தில் ஐ பத்து ஆண்டுகளாம்..
பொன் விழா காணும் நன் நாள் இன்று !
தாரகை சிரத்திலங்க சந்திரன் பதம் இலங்க
உறை பனி நிறை திகழ் ஆசனத்தில்
பாலனுடன் அமர்ந்திருந்து பூரணத் தாயாகி –
அருள் பாலிக்கும் பேசாலை எம்பதி ஆலயத்தில்
எந்தையும் தாயும் கைத்தலம் பற்றிய நன் நாள் அன்று.
முத்தாய் மூன்று மக்கள் குடை பிடிக்க
நிலா முக மகளும் உடன் வரவே,
ஜவ்வனமாய் பேத்தி ஐவர் பூத் தெளிக்க
குல விளக்காம் பேரனுமே கூட வர,
முத்துக்கு முத்தான செல்வர்களாம் இவர்கள்.
முத்துக்களைக் காக்கும் சிற்பிகளாய் மருமக்கள்
வாழையடி வாழையாக வாழ்ந்திடவே
உற்றமும் சுற்றமும் வாழத்திடுதிடுதே!!
பொன் மனம் என்னும் கோட்டையிலே,
இனிது இனிது யாவும் இனிதே என மனம் மகிழ
மங்களமாய் நிறைவு கண்டு இறையாசீர் பொழிந்திடவே
மன மகிழ்வாய் பொன் விழா காணும் நீங்கள்
வைர விழாவும் காண வேண்டும் என்று ஆசிக்கும்
பிள்ளைகள் நாங்கள் – அம்மா அப்பா உங்களை
நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவென
அன்போடு வாழ்த்துகின்றோம்!!