Main Menu

5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (19/10/2020)

நோர்வே Oslo இல் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் செல்லம் தனது 5வது பிறந்தநாளை 19ம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்

இன்று 5வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பப்பா பவன், அப்பம்மா சித்ரா, அம்மம்மா அருந்தவமலர், அத்தை நிலானி, நோர்வேயில் வசிக்கும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாமார், அக்காமார், தம்பி, மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார் பிரான்சில் வசிக்கும் பேரன்மார், பேத்திமார், சித்திமார்,மாமாமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நோர்வே துர்க்கை அம்மனின் அருளோடும், டென்மார்க் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 5வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் இணைந்து எல்லா செல்வங்களும் நிறையப்பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பப்பா பவன் அன்பு அப்பம்மா சித்ரா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.