Main Menu

5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்

தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாக கொண்ட திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று 2ம் திகதி ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்படுகிறது.

அமரர்.திரு.அருள்தாசன் அவர்களின் அன்பு மனைவியும், திருமதி.பூமாதேவி அவர்களின் சகோதரியுமான திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்களை இன்றைய தினம் நினைவு கூருகின்றார்கள்:
அன்பு பிள்ளைகள் உதயணன் (ஜேர்மனி), பாக்கியநாதன் இலங்கேஸ்வரி (இலண்டன்) அமிர்த நாதர் அருள்மொழி (தாயகம்) இரவீந்திரன் அருந்ததி (டென்மார்க்) லோகநாதன் அமுதவல்லி (தாயகம்) ரவி அனுசியா (சுவிஸ்) மற்றும் மருமக்கள்மார், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோர்.

இன்று 5வது ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூர்ந்து கொள்கிறது.

இன்றைய எமது நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு.திருமதி.உதயன் மல்லி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.