5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)

தாயகத்தில் நாரந்தனை கொய்யாத் தோட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் ராஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜெசிக்கா அவர்களின் 5வது ஆண்டு நினைவு நாள் இன்று 25ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை நினைவு கூரப்படுகிறது.
ஜெசிக்கா செல்லத்தை அன்பு அப்பா,அன்பு அம்மா,அன்புத்தங்கை ஜெனிற்றா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்று நினைவு கூரப்படும் ஜெசிக்காவை TRTதமிழ் ஒலி கலையகத்தில் பணிபுரியும் அன்பு உறவுகளும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய எமது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் ஜெசிக்காவின் பெற்றோர் அல்போன்ஸ் ராஜினி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 

ஐந்து ஆண்டுகள் வந்து சென்றாலும்
மறக்காத உன் முகத்தை தேடுகிறோம்
பூத்த உன் நினைவுகள் வாடும் முன்னமே
பூமியை விட்டே உதிர்ந்த மாயமென்ன?

அப்பாவின் உள்ளமோ துடிக்கிறது
அம்மாவின் மனமோ தவிக்கிறது
தங்கையோ தனித்து நின்று ஏங்குகிறாள்
எமை விட்டு நீயும் போனதெங்கே?

ஆயிரம் உறவுகள் எமக்கு இருந்தாலும்
ஜெசி என்று கூப்பிட நீயில்லையே
இடை வாழ்வில் பிரித்தின்பம் கண்டதினால்
என்ன பயன் இறைவா நானறியேன்…!

2gkgta29






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !