5ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு. தம்பாப்பிள்ளை சிவசுப்ரமணியம் (14/12/2015)

தாயகத்தில் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த காலம் சென்றவர்களான தம்பாப்பிள்ளை பொன்னம்மாவின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லையா இரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும் ,காலம் சென்ற ராஜரட்ணம் அவர்களின் அன்பு சகோதரனும் ,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவர் தம்பாப்பிள்ளை சிவசுப்ரமணியம் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவுநாள் இன்று திங்கட்கிழமை 14ம் திகதி டிசம்பர் மாதம் நினைவு கூரப்படுகிறது.

அமரர் தம்பாப்பிள்ளை சிவசுப்ரமணியம் அவர்களை நினைவு கூருபவர்கள் -அன்பு மனைவி சரஸ்வதி (நோர்வே)
அன்புப் பிள்ளைகள் – சுகிர்தமலர் (ஜேர்மனி ) இராஜரட்ணம் (சுவிஸ் )
கிருஷ்ணகுமார் (நோர்வே) மாலினி (பிரான்ஸ்) சிவகுமார் (ஐக்கிய இராச்சியம்)

அன்பு மருமக்கள் – மோகனரட்னம் (ஜேர்மனி)
பத்மலோஜினி (சுவிஸ்) நந்தினி (நோர்வே) விஜயரட்ணம் (கனடா)
சுசிலா (ஐக்கிய இராச்சியம்)
அன்புப் பேரப்பிள்ளைகள் – நிவேதா , நிரூசன் (ஜேர்மனி)
அபினா , அட்ஷயா, அபிசன் (சுவிஸ்)
அஸ்விதா , அஸ்வினி , பானுஷா( நோர்வே )
நிலக்க்ஷி, விதுஷா , விதுஷன், (பிரான்ஸ் )
அபிலாஷ், அபிஷா , (ஐக்கிய இராச்சியம்)
மைத்துனி -நாகேஸ்வரி (கனடா)

மற்றும் பெறாமக்கள் – நாகராஜன் (கனடா) ரேணுகா (அவுஸ்ரேலியா),
கெளரிமனோகரி (ஐக்கிய இராச்சியம்) மற்றும் ஊரார் உறவினர் அனைவரும் அமரர் திரு தம்பாப்பிள்ளை சிவசுப்ரமணியம் அவர்களை நினைவு கூருகின்றார்கள்.

குடும்பத்தின் ஒளிவிளக்காய் – திகழ்ந்து
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் எமையெல்லாம்
வழிநடத்தி இந்த வையகத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்து – இன்று
வானுறையும் தெய்வமாகிவிட்ட
எங்கள் அப்பாவே !

குடும்பவிளக்கின் பாதக் கமலங்களில்
மலர்தூவி 5ம் ஆண்டு நினைவுநாளை
நினைவு கூருகின்றோம் .

இந் நினைவு நாளை வானலைக்கு எடுத்து வருகிறார். அமரர் தம்பாப்பிள்ளை சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவி
திருமதி சரஸ்வதி சிவசுப்ரமணியம் அவர்கள் ( நோர்வேயிலிருந்து )
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

44_5



« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !