5ஜி ஐபோன் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள்
அநேகமாக ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற வரிசையின்படி 5ஜி ஐபோன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டின் இறுதிக்குள் மூன்று 5ஜி தொழில்நுட்பத்துடனான ஐபோன் மாடல்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தால் சீனாவில் ஆப்பிள் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், வருகிற மே மாதம் 5ஜி ஐபோனுக்கான உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
தற்போது ஐபோன் இருப்பும் குறைவாக உள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு ஐடி மூலம் இரண்டு போன்களை வாங்கத் தடை உருவாக்கியுள்ளது ஆப்பிள். இதன் காரணமாகவே ஐபோன் SE 2/ஐபோன் 9 ஆகியவற்றின் வெளியீட்ட்டை ஆப்பிள் ஒத்திவைத்துள்ளது.